பெங்களூருவில் உள்ள விண்வெளி சார் புத்தொழில் நிறுவனமானது, இந்தியாவிற்கு முதல் தனியார் புவி வரைபடமாக்கல் செயற்கைக்கோள் தொகுப்பினை வழங்கி வரலாறு படைத்துள்ளது.
'ஃபயர்ஃபிளை' எனப்படும் இந்த தொகுப்பானது பிக்சல் நிறுவனத்தினால் உருவாக்கப் பட்டதாகும்.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், அந்த நிறுவனமானது 'சகுந்தலா' எனப்படுகின்ற இந்தியாவின் முதலாவது தனியார் துறை அதி நிறமாலைப் புவி வரைபடமாக்கல் செயற்கைக் கோளினை விண்ணில் ஏவியது.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன்-9 ஏவுகலத்தினைப் பயன்படுத்தி மூன்று 'ஃபயர்ஃபிளை' செயற்கைக் கோள்கள் 550 கிலோமீட்டர் தொலைவிலான புவி தாழ் மட்ட சுற்றுப்பாதையில் ஏவப்பட்டன.
'ஃபயர்ஃபிளைஸ்' என்பது தற்போது உலகின் மிக உயர்ந்த தெளிவுத் திறன் கொண்ட அதி நிறமாலையிலான வணிக செயற்கைக்கோள் ஆகும்.
இஸ்ரோ நிறுவனமானது விண்வெளியில் 52 வெவ்வேறு செயற்கைக் கோள்களைக் கொண்டுள்ளது.