தேசிய மதிப்பாய்வு மற்றும் அங்கீகார வழங்கீட்டுச் சபையின் (NAAC) சமீபத்திய ஒரு மதிப்பீட்டில் மதராஸ் பல்கலைக்கழகம் A++ வகை பல்கலைக்கழகமாக தரநிலைப் படுத்தப் பட்டுள்ளது.
அதாவது, இந்தப் பல்கலைக்கழகமானது தற்போது இந்தியாவின் உயர் தரநிலை கொண்ட ஒரு நிறுவனமாக விளங்குவதால், பல்கலைக் கழக மானியக் குழு அதற்கு முழு சுயாட்சியை வழங்கியுள்ளது.
2014 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முந்தைய மதிப்பாய்வுச் சுழற்சியில், பல்கலைக் கழகம் A தரத்தினைப் பெற்றிருந்தது.
இது இரண்டு கீழ்நிலை வளாக மையங்கள் மற்றும் சில வெளிநாட்டு வளாகங்களைக் கொண்டிருக்கலாம் என்பதோடு அது எந்தவொருப் பொதுப் பிரிவிற்குமான எந்த பாடத் திட்டத்தையும் உருவாக்கலாம்.