TNPSC Thervupettagam

முதல் தேனீ பூங்கா

August 29 , 2023 455 days 729 0
  • தமிழகத்தின் முதல் தேனீ பூங்காவினை அமைப்பதற்காக திருவண்ணாமலையில் உள்ள ஜவ்வாது மலைப் பகுதியில் அமைந்த அத்திப்பட்டு என்னுமிடத்தில் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
  • இந்த மலையின் முகடு பகுதிகளில் காணப்படும் இலையுதிர் காடுகளுக்கு மத்தியில் இந்த பழங்குடியின குக்கிராமம் அமைந்துள்ளது.
  • இந்தப் பூங்காவானது மலைகளில் வாழும் பழங்குடியினரை அவர்களின் வழக்கமான தொழிலான தேன் சேகரிப்புத் தொழிலில் மீண்டும் ஈடுபடச் செய்வதை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்படுகிறது.
  • பழங்குடியினர் சாராத மக்களுக்கு, இயற்கையைப் பாதுகாப்பதில் தேனீக்களின் முக்கியப் பங்கு குறித்த அம்சங்கள் இந்த பூங்காவில் காட்சிப்படுத்தப் படும்.
  • 38 வருவாய் கிராமங்களில் உள்ள 272 குக்கிராமங்கள் மற்றும் 30,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் மலைப்பகுதிகளில் தற்போது சுமார் 300 பழங்குடியினர் மட்டுமே தேன் சேகரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்