தமிழ்நாடு அரசானது முதலாவது ‘நீலகிரி வரையாடு தினத்தினை’ அக்டோபர் 07 ஆம் தேதியன்று கொண்டாடியது.
மாநில அரசானது, E.R.C. டேவிதார் அவர்களின் நினைவாக இந்தத் தேதியை நீலகிரி வரையாடு தினமாக தேர்வு செய்துள்ளது.
இவர் 1960 ஆம் ஆண்டுகளில் தென்னிந்தியாவின் ஒரேயொரு மலைவாழ் குளம்பு விலங்கு பற்றிய ஆய்வுகளை முன்னெடுத்து மேற்கொண்ட வனவிலங்கு வளங்காப்பாளர் ஆவார்.
இவர் 1963 ஆம் ஆண்டில் நீலகிரிப் பகுதிகளில் நீலகிரி வரையாடுகளின் முதல் எண்ணிக்கைக் கணக்கெடுப்பை மேற்கொண்டார் என்பதோடு, மேலும் நீலகிரியில் 38 விலங்குகளைக் கொண்ட ஒரு பெரிய மந்தை உட்பட சுமார் 400 வரையாடுகள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இவர் 1975 ஆம் ஆண்டில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் முழுவதும் காணப்படும் நீலகிரி வரையாடுகள் பற்றிய விரிவானக் கணக்கெடுப்பினை மேற்கொண்டு அங்கு சுமார் 2,200 வரையாடுகள் இருப்பதாக மதிப்பிட்டார்.