2022 ஆம் ஆண்டிற்கான உலகின் ஒன்பதாவது பரபரப்பான விமான நிலையமாக டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் தரவரிசைப் படுத்தப் பட்டு உள்ளது.
இந்த விமான நிலையம் ஆண்டுக்கு 59.5 மில்லியன் பயணிகளைக் கையாளுகிறது.
இந்த அறிக்கையை சர்வதேச விமானக் கழகம் வெளியிட்டுள்ளது.
இது விமான நிலையங்களின் தரநிலைகளை அளவிடும் மற்றும் மதிப்பிடும் ஒரு உலகளாவிய அமைப்பாகும்.
கடந்த ஆண்டு முதல் 10 விமான நிலையங்களில், ஐந்து விமான நிலையங்கள் அமெரிக்காவிலும் வளைகுடாப் பகுதி, இங்கிலாந்து, ஐரோப்பா, தெற்கு மற்றும் மேற்கு ஆசியாவில் தலா ஒரு விமான நிலையமும் உள்ளன.
இந்தப் பட்டியலில் இடம் பெற்ற ஒரே ஆசிய மையமாக டெல்லி உள்ளது.