TNPSC Thervupettagam

முதல் பல்லுயிர்ப் பெருக்க மற்றும் இயற்கை சார் பத்திரம்

November 19 , 2024 6 days 60 0
  • ஆசிய மேம்பாட்டு வங்கி (ADB) ஆனது, அதன் முதல் பல்லுயிர்ப்பெருக்கம் மற்றும் இயற்கை சார் பத்திரத்தினை வெளியிட்டுள்ளது.
  • இது ஆசியா மற்றும் பசிபிக் முழுவதும் உள்ள தகுதியான திட்டங்களின் தொகுப்பிற்கு நிதியளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சுமார் 150 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் மதிப்பிலான (100 மில்லியன் அமெரிக்க டாலருக்குச் சமம்), 10 ஆண்டு கால முதிர்ச்சிக் காலத்தினைக் கொண்ட பத்திரமானது ஜப்பானின் டாய்-இட்சி ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தினால் வாங்கப்பட்டது.
  • ஆசிய மேம்பாட்டு வங்கியானது 2009 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பவளப் பாறை முக்கோண முன்னெடுப்பின் ஒரு இணை ஸ்தாபன அமைப்பாகும்.
  • 2023 ஆம் ஆண்டில், ADB ஆனது பங்குதாரர்களுடன் இணைந்து, இயற்கை சார் தீர்வு அமைப்புகளுக்கான நிதி வழங்கீட்டு மற்றும் உலகளாவிய சுற்றுச்சூழல் மையத்துடன் இணைந்து இயற்கை மூலதன நிதி ஆகியவற்றினை அறிமுகப்படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்