TNPSC Thervupettagam

முதல் பிரிவு கல்வி நிறுவனமாக மதராஸ் பல்கலைக்கழகம்

December 3 , 2023 230 days 217 0
  • தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரச் சபையின் சமீபத்திய அங்கீகார வழங்கீட்டு சுற்றில், இந்தப் பல்கலைக்கழகம் 3.59 மதிப்பெண்களைப் பெற்ற நிலையில், இது முன்னதாக பெற்ற 3.32 என்ற மதிப்பெண்ணில் இருந்து பெற்ற ஒரு சமீபத்திய முன்னேற்றம் ஆகும்.
  • பல்கலைக்கழக மானியக் குழுவானது, சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தரப் படுத்தப் பட்ட தன்னாட்சிக்கான ஒழுங்குமுறையைக் கொண்டு வந்தது.
  • இந்த அங்கீகாரத்தின் முக்கிய நன்மை என்னவென்றால், முதல் பிரிவு பல்கலைக் கழகங்கள் ஆனது பல்கலைக்கழக மானியக் குழுவின் அனுமதியின்றி தனது கல்வித் திட்டங்களைத் தொடங்கலாம் என்பதோடு, மேலும் அது குறித்த அறிக்கையினைப் பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு மட்டுமே தெரிவிக்க வேண்டும்.
  • பல்கலைக்கழக மானியக் குழுவின் (தரப்படுத்தப்பட்ட தன்னாட்சி ஒழுங்கு முறைகளை வழங்குவதற்கான பல்கலைக்கழகங்களின் வகைப்பாடு) 2018 ஆம் ஆண்டு குழுவானது, நாடு முழுவதும் உள்ள 60 நிறுவனங்களை முதல் பிரிவு கல்வி நிறுவனங்களாக அங்கீகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்