எத்தியோப்பியாவின் பாராளுமன்றம் தனது நாட்டின் மூத்த வெளியுறவுத் துறை அதிகாரியான சாஹ்லே வொர்க் சேவ்டேவை தனது நாட்டின் முதல் பெண் அதிபராக நியமித்ததை அங்கீகரித்திருக்கின்றது.
இவர் முலாடு டேஷோமீ விர்து என்பவருக்குப் பதிலாகப் பதவியேற்பார்.
தற்சமயம் அவர் ஐக்கிய நாடுகள் அமைப்பில் கீழ்நிலைச் செயலாளர் மற்றும் ஆப்பிரிக்கா ஒன்றியத்தின் பொதுச் செயலாளருக்கான சிறப்புப் பிரதிநிதி ஆகிய பதவிகளில் உள்ளார்.
எத்தியோப்பிய அமைச்சரவை 10 பெண்களை அமைச்சர்களாக நியமித்து ஆப்பிரிக்காவில் ருவாண்டா மற்றும் செசல்ஸ் ஆகிய நாடுகளுக்குப் பிறகு மூன்றாவது நாடாக தங்கள் அமைச்சரவையில் பாலின சமத்துவத்தை ஏற்படுத்திய நாடாக உருவெடுத்துள்ளது.