TNPSC Thervupettagam

முதல் பெண் கிரிக்கெட்டர் – 200 ODI விக்கெட்டுகள்

February 10 , 2018 2510 days 841 0
  • இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜீலன் கோஸ்வாமி ஒருநாள் போட்டியில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள முதல் பெண் கிரிக்கெட்டராக சாதனை படைத்துள்ளார்.
  • தென் ஆப்பிரிக்க நாட்டின் கிம்பர்லி நகரில் தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் தொடக்க வீராங்கனையான லௌரா வோல்வார்டின் விக்கெட்டை சாய்த்து ஜீலன் தன்னுடைய 200 ஆவது விக்கெட்டை கைப்பற்றினார்.
  • அதே போல், ஆண்களுக்கான ஒருநாள் போட்டியில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியவரும் இந்தியரே ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் கபில்தேவ் இச்சாதனையைப் படைத்தவராவார்.
  • மேலும் ஜீலன் கோஸ்வாமி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC – International Cricket Council) 2007-ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்