பெருங்கடல் பகுதிகளின் ஆளுமைக்காகவும், மனிதக் குலத்திற்கு இன்றியமையாத தொலை தூரச் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்குமான முதல் சர்வதேச ஒப்பந்தத்தினை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொண்டது.
இது தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பல்லுயிர் மீதான ஒப்பந்தம் என்று அதிகாரப் பூர்வமாக அழைக்கப்படுகிறது.
சர்வதேச கடற்பகுதியில் மீன்பிடித்தல், சுரங்கம் மற்றும் எண்ணெய் பிரித்தெடுத்தல் போன்ற நடவடிக்கைகளைப் பாதுகாத்தல் மற்றும் நிர்வகிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு குறைந்தபட்சம் 60 உறுப்பினர் நாடுகளால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
கடல்சார் மரபணு வளங்களின் நன்மைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான பல்வேறு கொள்கைகளை இந்த ஒப்பந்தம் நிறுவுகிறது.
பூமியின் மேற்பரப்பின் 60 சதவீதத்திற்கும் அதிகமான நிலப்பரப்பில் பெருங்கடல்கள் பரவிக் காணப்படுகின்றன.