முதன்முறையாகயானைகளின் வசிப்பிடப் பகுதியானது, மத்தியப் பிரதேசத்தில் உள்ள பந்தவ்கர் காப்புக் காட்டில் அமைந்துள்ளது. அந்த யானைகள் 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சத்தீஸ்கரில் இருந்து இங்கு வந்து குடியேறி தங்கியுள்ளன.
பந்தவ்கர் காப்புக் காடானது மத்தியப் பிரதேசத்தின் வடகிழக்கு எல்லையிலும் சாத்புரா மலைத்தொடர்களின் வடக்குப் பகுதிகளிலும் பரவியுள்ளது.
1968 ஆம் ஆண்டில், பந்தவ்கர் ஒரு தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. 1993 ஆம் ஆண்டில் அதன் அருகில் அமைந்துள்ள பன்பதா சரணாலயத்தின் கீழ் புலிகள் திட்டப் பணியின் ஆளுகையின் கீழ் பந்தவ்கர் ஒரு புலிகள் காப்பகம் என்று அறிவிக்கப் பட்டது.
‘நாரத பஞ்சரத்ரா’ மற்றும் ‘சிவ புராணம்’ ஆகிய பண்டையப் புத்தகங்களின் குறிப்புகளில் இருந்து இந்த இடமானது ராமாயண இதிகாசத்துடன் தொடர்புடையது என்பதனை அறியலாம்.
இதுவரை மத்தியப் பிரதேசத்தில் யானைகள் இருந்ததில்லை. இந்தியாவின் மத்தியப் பிராந்தியத்தில், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் (சில ஆண்டுகளுக்கு முன்பு வரை) போன்ற மாநிலங்களில் யானைகள் இனம் காணாமல் போனதற்கு எந்த காரணமும் இதுவரையில் அறியப் படவில்லை.
மத்தியப் பிரதேசமானது புலிகள் மாநிலம் என்று அழைக்கப்படுகின்றது.
2019 ஆம் ஆண்டு நடந்த புலிகளின் எண்ணிக்கைக் கணக்கெடுப்பில், மத்தியப் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான புலிகள் 526 என்ற அளவில் பதிவாகி உள்ளது.