முதல் வகை நீரிழிவு நோய் ஏற்படுவதைத் தாமதப்படுத்தும் முதல் மருந்து
December 2 , 2022 727 days 469 0
முதல் வகை நீரிழிவு நோய் ஏற்படுவதைத் தாமதப்படுத்தும் உயிரியல் சிகிச்சைக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகமானது ஒப்புதல் அளித்துள்ளது.
முதல் வகை நீரிழிவு நோயைத் தடுப்பதற்காக அங்கீகரிக்கப்பட்ட முதல் சிகிச்சை இது ஆகும்.
முதல் வகை நீரிழிவு நோயில், ஒரு நபரின் நோயெதிர்ப்பு அமைப்பானது இன்சுலினை உற்பத்தி செய்யும் கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் எனப்படும் செல்களைத் தாக்குகிறது.
இன்சுலின் என்பது இரத்தத்தில் உள்ள சர்க்கரை மூலக்கூறுகள் உயிரணுக்களுக்குள் நுழைய உதவுவதோடு அங்கு அவை ஆற்றல் உற்பத்திக்காகப் பயன்படுத்தப் படுகின்ற ஒரு ஹார்மோன் ஆகும்.