TNPSC Thervupettagam

முதல் வடகிழக்கு மேம்பாட்டு மாநாடு

November 23 , 2017 2534 days 842 0
  • நாட்டின் முதல் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டிற்கான உச்சி மாநாட்டை (NEDS – North East Development Summit – 2017) மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்.
  • டெல்லியைச் சேர்ந்த சிந்தனையாளர் குழுவான இந்தியா பவுண்டேஷன் அமைப்புடன் இணைந்து மணிப்பூர் அரசும், மத்திய அரசும் இணைந்து இம்மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.
  • வட கிழக்கு மாநிலங்களின் பொருளாதார ஆற்றல் வளத்தை வெளிக்காட்டவும், ரியல் எஸ்டேட், உணவு பதனிடல், மூங்கில் தொழிற்துறை, மற்றும் பிற வர்த்தக வியாபாரங்களில் முதலீட்டை கவர்வதற்கும் இம்மாநாடு நடத்தப்பட்டுள்ளது.
  • முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தக பிரதிநிதிகளின் வடகிழக்கு மாநிலங்கள் மீதான எண்ணத்தை மாற்றுவதற்காகவும், அவர்களிடத்தில் நம்பிக்கையை கட்டமைப்பதற்காகவும் இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்