முதல் வணிகரீதியிலான உத்திசார் கச்சா எண்ணெய் சேமிப்பகம்
April 11 , 2024 226 days 262 0
உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் நுகர்வோர் மற்றும் இறக்குமதியாளரான இந்திய நாடானது, தனது முதல் வணிக உத்திசார் கச்சா எண்ணெய்ச் சேமிப்பகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
இந்திய உத்திசார் பெட்ரோலியம் இருப்புகள் லிமிடெட் (ISPRL) நிறுவனமானது, கட்டிடம் மற்றும் செயல்பாடு ஆகியவற்றிற்காக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு நோக்கத்திற்கான அமைப்பு ஆகும்.
இது கர்நாடகாவில் உள்ள படூரில் 2.5 மில்லியன் டன் கொள்ளளவிலான நிலத்தடிச் சேமிப்புக் கிடங்கு அமைக்க ஏலம் கோரியுள்ளது.
படூர்-II கிடங்கு ஆனது PPP (பொது-தனியார் கூட்டாண்மை) மாதிரியில் கட்டமைக்கப் படும் என்பதோடு இங்கு தனியார் நிறுவனங்கள் அந்தச் சேமிப்பகத்தை வடிவமைத்து, கட்டமைத்து, நிதியளித்து மற்றும் அவற்றை இயக்கும் பல செயல்பாடுகளை மேற் கொள்ளலாம்.
ஆந்திரப் பிரதேசத்தில் விசாகப்பட்டினம் (1.33 மில்லியன் டன்கள்), கர்நாடகாவில் மங்களூருவில் (1.5 மில்லியன் டன்கள்) மற்றும் படூர் (2.5 மில்லியன் டன்கள்) ஆகிய மூன்று இடங்களில் 5.33 மில்லியன் டன் கச்சா எண்ணெயைச் சேமித்து வைப்பதற்காக ISPRL முதல் கட்டமாக இந்தத் தொடரற்ற நிலத்தடிப் பாறைக் குகைகளில் உத்திசார் பெட்ரோலிய இருப்புக்களை உருவாக்கியது.