முதல் வணிக செயற்கைக் கோள் அகலப் பட்டை அலைக்கற்றைச் சேவை
September 20 , 2022 800 days 428 0
ஹியூஸ் கம்யூனிகேஷன்ஸ் இந்தியா (HCI) நிறுவனமானது இஸ்ரோவுடன் இணைந்து அதன் முதல் உயர் செயல்திறன் செயற்கைக்கோள் (HTS) மூலமான அகலப் பட்டை அலைக்கற்றை இணையச் சேவையை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது.
இது இஸ்ரோவின் Ku-கற்றைத் திறன் கொண்ட ஜிசாட்-11 மற்றும் ஜிசாட்-29 ஆகிய செயற்கைக் கோள்களைப் பயன்படுத்துகிறது.
இது வழக்கமான செயற்கைக்கோளின் அதே அளவு சுற்றுப்பாதைக்கான அலைக் கற்றையினைப் பயன்படுத்துவதால் ஒரு பிட் என்ற இணையச் சேவைக்கு ஆகும் செலவைக் குறைக்கும் அளவுக்கு அதன் திறனை அதிகரிக்கிறது.
இது இந்தியாவின் முதல் வணிக ரீதியிலான செயற்கைக்கோள் அகலப் பட்டை அலைக் கற்றைச் சேவையாகும்.
இது மிகவும் குறைந்த விலை அலைவரிசை மற்றும் அதிக பயனர் அனுபவத்தை வழங்குகிறது.
இது வடகிழக்குப் பகுதி முதல் லே மற்றும் லடாக்கின் தொலைதூரப் பகுதிகள் வரை இந்தியா முழுவதும் உள்ள தொலைதூர இடங்களுக்கு அதிவேக செயற்கைக்கோள் அகலப் பட்டை அலைக்கற்றைச் சேவைகளை வழங்குகிறது.