TNPSC Thervupettagam

முதல் ஸ்கார்பீன் வகுப்பு நீர்முழ்கிக் கப்பல்

December 15 , 2017 2568 days 1051 0
  • இந்தியாவின் உள்நாட்டுத் தொழில் நுட்பத்தோடு தயாரிக்கப்பட்ட முதல் ஸ்கார்பீன் வகுப்பு கப்பலான ஐ.என்.எஸ் கல்வாரியை மும்பையிலுள்ள கடற்படை தளத்தில் இந்திய கடற்படைக்கு பிரதமர் அர்ப்பணித்தார்.
  • டீசல்-எலக்ட்ரிக் என்ஜினால் செலுத்தப்படும் ஸ்கார்பீன் வகை கப்பல்களில் டர்பீடோ (Torpedo) எனும் நீர்மூழ்கி குண்டுகள் முதன்மை ஆயுதங்களாக பொருத்தப்பட்டு உள்ளன.
  • ஸ்கார்பீன் வகுப்பு கப்பலான இக்கப்பலுக்கு ஆழ்கடல் புலி சுறாவின் (Deep Tiger Shark) பெயர் கொண்டு கல்வாரி என பெயரிடப்பட்டுள்ளது.
  • மேலும் INS கல்வாரி தன்னிச்சையான காற்று உந்துவிசை (Air Independent Propultion) அமைப்பை கூடுதலாக கொண்டது.
  • வழக்கமான டீசல்-எலக்ட்ரிக் என்ஜினுடைய நீர்மூழ்கிக் கப்பல்கள் குறிப்பிட்ட நாட்கள் கழித்து நீரின் மேற்பரப்பிற்கு வந்து ஆக்ஸிஜன் பெற்று தன் மின்கலன்களை (Battery) மீள்நிரப்பம் (Recharge) செய்ய வேண்டும்.
  • இவ்வகையில் Project 75-ன் முதல் கப்பல் INS கல்வாரி ஆகும்.
  • 1500 டன் எடையுடைய INS கல்வாரி 300 மீட்டர் ஆழம் வரை செல்லக் கூடியது.
  • இந்த கப்பல் நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் நீர் மேற்பரப்பு கப்பல்கள் போன்றவற்றுக்கு எதிரான போர்த்திற தாக்குதல் வசதிகள் கொண்டது.
  • நீர்மூழ்கி கப்பல்கள் பெரும்பாலும் எதிரிகளின் கண்காணிப்பில் அகப்பட பெரும் வாய்ப்புகள் உண்டு. ஆனால் AIP அமைப்பை உடைய நீர்மூழ்கி கப்பல்களால் பெரும் காலத்திற்கு நீரில் மூழ்கியபடியே இருக்க இயலும்.
  • பிரான்ஸ் நாட்டு நிறுவனமான DCNSன் தொழில்நுட்ப பரிமாற்ற உதவியுடன் “திட்டம் 75”-ன் கீழ் (Project 75) மும்பையிலுள்ள மஸாகான் கப்பற்கட்டு தளத்தில் ஆறு  ஸ்கார்பீன் வகுப்பு கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன.
  • ஐ,என்.எஸ்.கல்வாரிக்கு அடுத்து ஐ,என்.எஸ் கந்தேரி 2020- ல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. இது தற்போது  முன்னோட்டங் காணல் (Sea Trial) நிலையில் உள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்