இந்தியாவின் உள்நாட்டுத் தொழில் நுட்பத்தோடு தயாரிக்கப்பட்ட முதல் ஸ்கார்பீன் வகுப்பு கப்பலான ஐ.என்.எஸ் கல்வாரியை மும்பையிலுள்ள கடற்படை தளத்தில் இந்திய கடற்படைக்கு பிரதமர் அர்ப்பணித்தார்.
டீசல்-எலக்ட்ரிக் என்ஜினால் செலுத்தப்படும் ஸ்கார்பீன் வகை கப்பல்களில் டர்பீடோ (Torpedo) எனும் நீர்மூழ்கி குண்டுகள் முதன்மை ஆயுதங்களாக பொருத்தப்பட்டு உள்ளன.
ஸ்கார்பீன் வகுப்பு கப்பலான இக்கப்பலுக்கு ஆழ்கடல் புலி சுறாவின் (Deep Tiger Shark) பெயர் கொண்டு கல்வாரி என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் INS கல்வாரி தன்னிச்சையான காற்று உந்துவிசை (Air Independent Propultion) அமைப்பை கூடுதலாக கொண்டது.
வழக்கமான டீசல்-எலக்ட்ரிக் என்ஜினுடைய நீர்மூழ்கிக் கப்பல்கள் குறிப்பிட்ட நாட்கள் கழித்து நீரின் மேற்பரப்பிற்கு வந்து ஆக்ஸிஜன் பெற்று தன் மின்கலன்களை (Battery) மீள்நிரப்பம் (Recharge) செய்ய வேண்டும்.
இவ்வகையில் Project 75-ன் முதல் கப்பல் INS கல்வாரி ஆகும்.
1500 டன் எடையுடைய INS கல்வாரி 300 மீட்டர் ஆழம் வரை செல்லக் கூடியது.
இந்த கப்பல் நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் நீர் மேற்பரப்பு கப்பல்கள் போன்றவற்றுக்கு எதிரான போர்த்திற தாக்குதல் வசதிகள் கொண்டது.
நீர்மூழ்கி கப்பல்கள் பெரும்பாலும் எதிரிகளின் கண்காணிப்பில் அகப்பட பெரும் வாய்ப்புகள் உண்டு. ஆனால் AIP அமைப்பை உடைய நீர்மூழ்கி கப்பல்களால் பெரும் காலத்திற்கு நீரில் மூழ்கியபடியே இருக்க இயலும்.
பிரான்ஸ் நாட்டு நிறுவனமான DCNSன் தொழில்நுட்ப பரிமாற்ற உதவியுடன் “திட்டம் 75”-ன் கீழ் (Project 75) மும்பையிலுள்ள மஸாகான் கப்பற்கட்டு தளத்தில் ஆறு ஸ்கார்பீன் வகுப்பு கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன.
ஐ,என்.எஸ்.கல்வாரிக்கு அடுத்து ஐ,என்.எஸ் கந்தேரி 2020- ல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. இது தற்போது முன்னோட்டங் காணல் (Sea Trial) நிலையில் உள்ளது.