தானியங்கி தொழில்நுட்பத்திற்கான சர்வதேச மையம் (ICAT - International Centre for Automotive Technology) வால்வோ எய்ச்சர் வர்த்தக வாகன நிறுவனத்திற்காக உயர்சக்தியுடைய இயந்திர மாதிரிக்கான முதல் பாரத் ஸ்டேஜ் - 6 (Bharat Stage - VI) சான்றிதழை நிறைவு செய்துள்ளது.
இந்த இயந்திரம் இந்தியாவில் வால்வோ எய்ச்சர் நிறுவனத்தால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட இயந்திரமாகும்.
இத்தயாரிப்பானது, 202௦ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்பட இருக்கும் பாரத் ஸ்டேஜ் - 6 விதிகளுக்காக மிகவும் முன்கூட்டியே தயாரிக்கப்பட்டதாகும்.
தேசிய தானியங்கி சோதனை மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் (NATRIP - National Automotive Testing and R & D Infrastructure Project) உலகத் தரத்தில் அமைக்கப்பட்ட முதல் மையம் ICAT ஆகும்.
இது மத்திய கனரகத் தொழிற்சாலை மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளது.
BS-VI விதிகளுக்கு மாறுவதன் மூலம், உலகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருள் தரத்திற்கான உயர்ந்த அளவுகளை உபயோகிக்கும் நாடாக இந்தியா மாறும்.