அரசு கணிணி இணையங்களின் மேல் நடத்தப்பெறும் சைபர் தாக்குதல்களை கண்காணிக்கவும், தணிப்பதற்கும், முன்கூட்டியே கண்டறிய உதவுவதற்கும் NIC-CERT எனும் அமைப்பை முதல்முறையாக மத்திய அரசு அமைத்துள்ளது.
தேசிய தகவல் மையத்தில் (National Information Centre) நடத்தப்பெறும் இணைய தாக்குதல்களை கண்டறியவும், தடுக்கவும், தாக்குதலின் தாக்கத்தை தணிக்கவும் ஏற்படுத்தப்பட்ட பிரத்யேக அமைப்பே NIC-CERT ஆகும்.
அனைத்து அளவிலான அரசு நிலைகளுக்கு இடையே மேற்கொள்ளப்படும் தொலைத்தொடர்பு, அரசு மற்றும் குடிமகன்களுக்கு இடையே நடைபெறும் தொலைத்தொடர்பு ஆகியவை உட்பட NIC-ன் இணையவாயிலில் உள்ள தரவுகளையும் கண்காணித்து அதன் மூலம் சைபர் தாக்குதல்களின் முன்கூட்டிய கண்டுபிடிப்பு மற்றும் உடனடித் தணிப்பு ஆகியவற்றை மேற்கொள்ளுதலை NIC-CERT உறுதி செய்யும்.
NIC – CERT அமைப்பானது துறைவாரியான CERT அமைப்புகளுடனும், தேசிய அளவிலான CERT–IN அமைப்புடனும் நெருங்கிய கூட்டிணைவு மற்றும் ஒருங்கிணைப்பு கொண்டு செயல்படும்.
CERT
CERT – (Computer Emergency Response Team) ஆனது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழிற்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சைபர் பாதுகாப்பு தொடர்பான முன்னணி தேசிய நிறுவனமாகும்.
ஹேக்கிங், பிஷ்ஷிங் (Pishing) போன்ற பல்வேறு சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை இது கையாளுகின்றது.
சைபர் தாக்குதல் நிகழ்வுகளின் கையாளுதலுக்கான அவசர நடவடிக்கைகள் மேற்கொள்வது, சைபர் தாக்குதல் நிகழ்வுகளின் தகவல்களை சேகரிப்பது, ஆராய்வது மற்றும் பரப்புவது இதன் முக்கியப் பணியாகும்.