TNPSC Thervupettagam

முதியோருக்கான முன்முயற்சிகள் – தமிழ்நாடு

February 19 , 2020 1798 days 753 0
  • தமிழ்நாடு அரசானது முதியவர்களுக்காக பல முன்முயற்சிகளை மேற்கொள்ளும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
  • தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட இருக்கும் இந்த முன்முயற்சிகள் நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லோ தலைமையிலான ஆய்வுக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.
  • முன்னதாக, தமிழ்நாடு அரசானது அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை ஒழிப்பு ஆய்வகத்துடன் (Abdul Latif Jameel Poverty Lab - JPAL) இணைந்து, முதியவர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஒரு ஆய்வைத் தொடங்கியது.
  • ஒரு சோதனைத் திட்டமாக, 37 மாவட்டங்களில் (அனைத்து மாவட்டங்களிலும்) இரண்டு வட்டாரங்களில் முதியோர் வள மையங்களைத் தொடங்குவதற்காக நிதிநிலை அறிக்கையில் ரூ. 37 லட்சம் நிதியை ஒதுக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
  • முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா தலைமையிலான தமிழ்நாடு அரசானது நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது மனைவி டஃப்லோ ஆகியோரால் நிறுவப்பட்ட J-PAL அமைப்புடன் 2014 ஆம் ஆண்டு நவம்பரில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
    • கொள்கை வகுப்பிற்காக ஆதாரத்தின் அடிப்படையிலான அணுகுமுறையை உருவாக்குதல் மற்றும்
    • வறுமை ஒழிப்புத் திட்டங்களின் தாக்கத்தை அதிகரித்தல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்