143 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி, வயதான மக்கள் தொகையின் சவால்களைச் சமாளிப்பதற்கான அதன் தயார்நிலையில் இந்தியா 123வது இடத்தில் இருப்பதால் அதற்கான தயார் நிலையில் இருந்து வெகு தொலைவில் உள்ளது.
சுவிட்சர்லாந்து மிகவும் தயாராக உள்ள நாடாக முதலிடத்தில் உள்ளது என்ற நிலையில் அதைத் தொடர்ந்து நார்வே மற்றும் டென்மார்க் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
ஆசிய நாடுகளில் சிங்கப்பூர் 10வது இடத்தில் உள்ள நிலையில் ஐக்கியப் பேரரசு 14வது இடத்தைப் பிடித்தது, அதைத் தொடர்ந்து ஜப்பான் (15), அமெரிக்கா (24), சீனா (46) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இந்தியா தற்போது உலகின் இளைய (இளம் தலைமுறை கொண்டவர்) தேசமாக உள்ளதோடு அதன் மக்கள்தொகையில் சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் 25 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் சுமார்65 சதவீதத்திற்கும் அதிகமானோர் 35 வயதிற்கு உட்பட்டவர்களாகவும் உள்ளனர்.
தற்போது, 'நேச்சர் ஏஜிங்' தளத்தின் படி, இந்தியாவின் அண்டை நாடுகள் ஒப்பீட்டு அளவில் சிறப்பான தயார் நிலையில் உள்ளன என்ற நிலையில் மற்ற நாடுகள் நிலை வங்காள தேசம் (86), இலங்கை (94), நேபாளம் (102), மற்றும் பாகிஸ்தான் (118) ஆகும்.
உலகளாவிய சுகாதார அணுகலில் இந்தியா 106வது இடத்தில் உள்ளது.
கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் இதில் சிறந்தச் செயல்திறன் கொண்டவையாக உள்ளன.
உணவுப் பாதுகாப்பில் இந்தியா 97வது இடத்திலும், டென்மார்க் இதில் சிறந்தச் செயல் திறன் கொண்ட நாடாகவும் உருவெடுத்துள்ளது.
ஓய்வூதியத்தில், அர்ஜென்டினா மற்றும் ஆர்மீனியா ஆகியவை சிறந்தச் செயல் திறன் கொண்டவையாக உள்ளன, இந்தியா இதில் 102 வது இடத்தில் உள்ளது.
மனநலம் சார்ந்த தரவரிசையில் குவைத் மிகவும் சிறந்த நாடாகவும், இந்தியா 93வது இடத்திலும் உள்ளன.