ஆனைமலை மலைப்பகுதியைச் சேர்ந்த முதுவன் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாடு வனத்துறையுடன் இணைந்து ஒரு தனித்துவமான பணியை மேற்கொண்டு உள்ளனர்.
அவர்கள் தங்கள் பாரம்பரிய அறிவு மற்றும் அனுபவம் கொண்டு வனவிலங்குகளுடன் ஒருங்கே வாழ்வதற்காக புகழ் பெற்றவர்கள்.
'அருகி வரும்' மாநில விலங்கைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட நீலகிரி வரையாடு வளங்காப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக அவர்கள் பணியாற்றுவர்.
முதுவன் பழங்குடியினர் பாரம்பரிய அறிவு மற்றும் மலைகளைப் பற்றிய புரிதலுக்குப் பெயர் பெற்றவர்கள்.
அவர்கள் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பற்றிய தங்கள் அறிவைப் பகிர்ந்து கொள்வதன் மூலமும், காட்டுத் தீயைத் தடுப்பதில் நமக்கு உதவுவதன் மூலமும் வளங் காப்பு பணியில் ஏற்கனவே நிறைய பங்களிப்பைச் செய்து வருகின்றனர்.