TNPSC Thervupettagam

முத்தரப்பு ஒப்பந்தம் - திரிபுரா

April 6 , 2024 282 days 309 0
  • மத்திய அரசானது, சமீபத்தில் திரிபுரா அரசு மற்றும் TIPRA மோத்தா எனப்படுகின்ற  திரிபுரா மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சி ஆகியவற்றுடன் சேர்ந்து ஒரு முத்தரப்பு ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ளது.
  • இந்த ஒப்பந்தமானது, பொருளாதாரம், அரசியல், நிலம், மொழியியல் மற்றும் கலாச்சார உரிமைகள் உள்ளிட்ட, மாநிலத்தின் பழங்குடியின மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளுக்கு என்று சரியான நேரத்திலான "சிறந்த முறையிலானத் தீர்வுகளை வழங்குவதற்காக" இது கையொப்பமாகியுள்ளது.
  • TIPRA மோத்தா கட்சியின் நிறுவனர் மற்றும் பிரத்யோத் கிஷோர் மாணிக்ய தெபர்மா ஆகியோர் தொடங்கிய ஒரு காலவரையற்ற உண்ணாவிரதத்திற்கு இது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
  • TIPRA மோத்தா கட்சியின் பல்வேறு கோரிக்கைகளில், "கிரேட்டர் திப்ராலாந்து" என்ற திரிபுராவின் பழங்குடியினருக்கான தனி மாநிலம் ஆகியவை அடங்கும்.
  • திரிபுரா பழங்குடியினர் பகுதிகள் தன்னாட்சி மாவட்டச் சபை (TTAADC) பகுதிக்கு வெளியே வசிப்பவர்களையும் இதனுள் சேர்க்க முயல்கிறது.
  • மத்திய அரசின் நேரடி நிதி, அதன் சொந்த காவல் படை மற்றும் மாநிலத்தில் மேற் கொள்ளப்படும் எரிவாயு எடுப்பின் மூலம் கிடைக்கும் வருவாயின் பங்கு போன்றவை உட்பட TTAADC சபைக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க அக்கட்சி கோரியுள்ளது.
  • ரோமானிய எழுத்து வடிவத்தினைப் பழங்குடியின கோக்போரோக் மொழிக்கான அதிகாரப்பூர்வ எழுத்து வடிவமாக அறிவிக்கப்பட வேண்டும் எனவும் அந்தக் கட்சி கோருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்