SBICAP வென்ச்சர்ஸ் லிமிடெட் (SVL) நிறுவனம் மற்றும் வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகம் ஆகியவை "முத்தரப்பு வளர்ச்சி ஒத்துழைப்பு நிதியினை (TDC நிதி)" அமைப்பதற்காக கை கோர்த்துள்ளன.
உலகப் புத்தாக்க மேம்பாட்டு நிதிக்கு சுமார் ரூ. 175 கோடியை இந்தியா செலுத்த வேண்டும் என்ற உறுதிப்பாட்டை பூர்த்தி செய்வதற்காக ஒரு முத்தரப்பு மேம்பாட்டு ஒத்துழைப்பு நிதி உதவும்.
இந்த நிதியானது SVL நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டு அறிவுறுத்தப்படும்.
மேலும் வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகத்திற்கான உலகப் புத்தாக்க மேம்பாட்டு நிதி திட்டத்திற்கான வசதிகளையும் SVL நிறுவனம் ஏற்பாடு செய்யும்.