தேசிய பங்குச் சந்தை பெருநிறுவன கடன் பங்குகளை திரும்ப வாங்கிடும் கடன் பிரிவில் முத்தரப்பு ரெப்போ சந்தை நடைமுறையை (Tri-Party Repo Market Platform) ஆரம்பித்துள்ளது.
வர்த்தக நடைமுறைகளின் போது உத்தரவாத தேர்ந்தெடுப்பு, பணமளிப்பு மற்றும் தீர்வு, பாதுகாப்பு மற்றும் மேலாண்மை போன்ற சேவைகளை ஏற்படுத்திட இடைத்தரகர் போன்று செயல்படுவதற்கு ஏதுவாக வாங்குபவர் மற்றும் விற்பவர் தரப்பு தவிர மூன்றாம் தரப்பு பிரதிநிதி என்ற முறையில் இது ஒரு ரெப்போ ஒப்பந்தமாகும்.
இந்நடைமுறை பங்குகளுக்கு எதிராக கடன் வாங்கிடவும், பங்குதாரர்களுக்கு குறுகிய கால நீர்மை நிலையை (Liquidity) ஏற்படுத்தவும் வாய்ப்புகளை உருவாக்குகின்றது.
இது பெருநிறுவனப் பத்திரங்களுக்கான தேவையை அதிகப்படுத்தும். மேலும் பெரு நிறுவன பத்திர சந்தையில் மிகவும் தேவைப்படும் நீர்மைநிலையை அதிகப்படுத்திட உதவிடும்.