22 ஆண்டுகளுக்குப் பிறகு முத்திரைத்தாள் கட்டணத்தைத் தமிழக அரசு திருத்தி அமைத்துள்ளது.
"இந்திய முத்திரைத்தாள் (தமிழ்நாடு திருத்தம்) சட்டம், 2023 என பெயரிடப்பட்ட திருத்த மசோதா இதற்காக நிறைவேற்றப்பட்டது.
1899 ஆம் ஆண்டு இந்திய முத்திரைத்தாள் சட்டத்தின் முதலாவது அட்டவணையில் குறிப்பிடப் பட்டுள்ள விகிதத்தின் படி ஆவணங்களுக்கான முத்திரைத்தாள் கட்டணம் வசூலிக்கப் படுகிறது.
2001 ஆம் ஆண்டிலிருந்து, நேரடியாக நீதித்துறை சாராத ரீதியில் முத்திரைத் தாள்களை அச்சிடுவதற்கான செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது.
100 ரூபாய்க்கு குறைவான முத்திரைத்தாள் கட்டணம் செலுத்துவதற்கான வசதியானது, தொடர்ந்து இணைய வழி முத்திரைத்தாள் வசதி மூலம் கிடைக்கப் பெறும்.