முனிச் பாதுகாப்பு மாநாடு என்பது ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெறும் சம காலத்திய உலக நாடுகளின் பாதுகாப்புக் கொள்கை சார்ந்தச் சவால்கள் குறித்த ஒரு வருடாந்திர மாநாடு ஆகும்.
முனிச் பாதுகாப்பு மாநாடானது, ஒரு ஜெர்மனி அதிகாரி மற்றும் பதிப்பாளர் எவால்ட் ஹெயின்ரிச் வோன் க்ளெய்ஸ்ட் என்பவரால் பனிப்போர் (1947-1991) உச்சக் கட்டத்தில் இருந்த போது நிறுவப்பட்டது.
1963 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த மாநாடானது ஆரம்பத்தில் இராணுவப் பிரச்சினைகளில் மட்டுமே கவனம் செலுத்தியது.
மேலும், பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளும் அவற்றின் உயர்மட்ட அதிகாரிகளும் மட்டுமே இதில் கலந்து கொண்டனர்.
பனிப்போர் முடிவடைந்த பின்னர், பாதுகாப்பு சார்ந்த விஷயங்களுக்கும் அப்பாற் பட்டுப் பருவநிலை மாற்றம் மற்றும் புலம்பெயர்வு போன்ற பிரச்சினைகளையும் உள்ளடக்கிய வகையில் தனது செயல்பாட்டு நிரலை விரிவுபடுத்தியது.
ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட கிழக்கு நாடுகளின் தலைவர்களையும் இதில் பங்கேற்பதற்காக அழைப்பு விடுக்கத் தொடங்கியது.