முன்கூட்டியே வார்த்தெடுக்கப்பட்ட அமைப்பைப் பயன்படுத்திக் கட்டப்பட்ட வீடுகள்
May 30 , 2022 913 days 435 0
சென்னை பெரும்பாக்கத்தில் முன்கூட்டியே வார்த்தெடுக்கப்பட்ட அமைப்பைப் பயன்படுத்திக் கட்டப்பட்ட 1,152 வீடுகளைப் பிரதமர் அவர்கள் திறந்து வைத்தார்.
முன்கூட்டியே வார்த்தெடுக்கப்பட்ட அமைப்பில், தூண்கள், தூண் தாங்கிகள், அடுக்குகள் போன்ற கட்டமைப்புகள் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு, பிறகு கட்டுமான இடத்திற்கு அவை கொண்டு வரப்படுகின்றன.
பெரும்பாக்கம் திட்டமானது, உலக வீட்டு வசதித் தொழில்நுட்பச் சவாலின் கீழான லைட் ஹவுஸ் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
தமிழகத்தின் பெரும்பாக்கம் திட்டம் உட்பட மொத்தம் ஆறு லைட் ஹவுஸ் திட்டங்கள் உள்ளன.
மற்ற ஐந்து திட்டங்களும் குஜராத், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகிய இடங்களில் செயல்படுத்தப்படுகின்றன.
ஆறு திட்டங்களுள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் பெரும்பாக்கம் திட்டத்தில் தான் அதிக எண்ணிக்கையிலான வீடுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.