மத்திய நேரடி வரிகள் வாரியம் ஆனது 2023-24 ஆம் நிதியாண்டில் அதிக எண்ணிக்கையாக 125 முன்கூட்டிய பரிமாற்ற விலை நிர்ணய ஒப்பந்தங்களில் (APAs) கையெழுத்திட்டுள்ளது.
இதில் 86 ஒரு தரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் 39 இருதரப்பு ஒப்பந்தங்கள் ஆகும்.
APA திட்டம், விலையிடல் முறைகளை நிர்ணயிப்பதன் மூலம் பரிமாற்ற விலையிடல் களத்தில் வரி செலுத்துவோருக்கு விலை சார்ந்த உறுதியை வழங்க முயற்சிக்கிறது.
இது தொடர்புடைய ஒப்பந்தத் தாரர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட விலையானது எந்த தொடர்புமற்ற ஒப்பந்தத் தாரர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட விலைக்குச் சமமாக இருக்கும் சர்வதேசப் பரிவர்த்தனைகளின் விலையை அதிகபட்சமாக ஐந்து எதிர்கால ஆண்டுகளுக்கு முன் கூட்டியே தீர்மானிக்கிறது.