TNPSC Thervupettagam

முன்னணி எரிபொருள் வழங்கி

December 21 , 2017 2530 days 850 0
  • சவூதி அரேபியாவை விஞ்சி முதன்முறையாக நடப்பு ஆண்டில் இந்தியாவின் முன்னணி கச்சா எண்ணெய் வழங்கியாக (Oil Supplier) ஈராக் உருவாகியுள்ளது.
  • கன கச்சா எண்ணெயை (Heavy Crude oil) சலுகை விலையில் இந்தியாவுக்கு ஈராக் விற்க முற்பட்டுள்ள வேளையில் இத்தகு நிலை சாத்தியமாகியுள்ளது.
  • தன்னுடைய எரிபொருள் எண்ணெய் தேவையின் பூர்த்திக்காக கச்சா எண்ணெய் இறக்குமதியையே இந்தியா பெரிதும் சார்ந்துள்ளது.  நடப்பு புள்ளி விவரங்களின்படி தன் எண்ணெய் எரிபொருள் தேவைகளில் இந்தியா 80 சதவீதத்தை இறக்குமதி மூலம் பெறுகிறது.
  • தற்போதைய நிலையில் இந்தியாவிற்கு எண்ணெய் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஈராக் முதலிடத்திலும், சவூதி அரேபியா இரண்டாவது இடத்திலும், ஈரான் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
  • இந்தியாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் வழங்கியாக இருந்த ஈரான் மீது 2015-ஆம் ஆண்டு அணுஆயுத சோதனைத் திட்டத்தை மேற்கொண்டமைக்காக மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடையை விதித்ததனால் இந்தியாவிற்கு எரிபொருள் வழங்கும் நாடுகளில் ஈரான் 7வது இடத்தை அடைந்தது.
  • இருப்பினும் 2015ம் ஆண்டிற்குப் பின் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகள் நீக்கப் பட்டதனை அடுத்து இந்திய எரிபொருள் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஈரானிடம் இருந்து இறக்குமதியை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்