பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திலுள்ள லௌடர் கல்வி நிறுவனத்தின் சிந்தனைச் சாவடி மற்றும் குடிமைச் சங்கங்கள் திட்டத்தில் (Think Tank and Civil Societies Programme) இந்தியாவின் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையமானது (Centre for Science and Environment) உலக அளவில் 16-வது முன்னணி சுற்றுச்சூழல் கொள்கைகளுக்கான சிந்தனைச் சாவடியாகவும், இந்தியாவின் முதல்நிலை சுற்றுச்சூழல் சிந்தனை சாவடியாகவும் தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளது.
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையமானது புது தில்லியில் அமைந்துள்ள ஓர் பொது நல ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை (Public Interest Research and Advocacy Organisation) நிறுவனமாகும்.
சுற்றுச்சூழல் சார்ந்த 5 முக்கிய களங்களில் இது தன் செயல்பாடுகளை கொண்டுள்ளது.
சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வுக்கான மக்களை தொடர்பு கொள்ளுதல்
ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை
கல்வி மற்றும் பயிற்சி
அறிவு இணையவாயில் சேவை
மாசுபாடு கண்காணிப்பு
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையமானது “Down to Earth“ எனும் மாத இதழை வெளியிடுகின்றது.