TNPSC Thervupettagam

முன்னாள் இஸ்ரோ தலைவர் யு.ஆர். ராவ் மரணம்

July 24 , 2017 2723 days 1105 0
  • முன்னாள் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழக (இஸ்ரோ) தலைவர் மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற விண்வெளி விஞ்ஞானி பேராசிரியர் யூ.ஆர்.ராவ் காலமானார்.
  • 1984-1994 ஆண்டுகளில் ISRO தலைவராகப் பணியாற்றிய பேராசிரியர் ராவ், கடந்த ஆண்டு சர்வதேச விமான ஏவுகணை சம்மேளனத்தின் (IAF)ஹால்ஆஃப் ஃபேமில் நுழைந்தார்.
  • மெக்ஸிகோவின் குவாடலஜாராவில் நடைபெற்ற IAF காங்கிரஸ் 2016-ல் கலந்து கொண்டார்.
  • 2017 பத்மவிபூசன் விருது பெற்ற விஞ்ஞானி. நாட்டின் முதல் செயற்கைக் கோளான ஆர்யபட்டா உட்பட, குறைந்தபட்சம் 20 செயற்கைக்கோள்களை இந்தியா இவரது கட்டுப்பாட்டின் கீழ் மேற்கொண்டது.
  • ராவ் அகமதாபாத்தில் உள்ள பிசிக்கல் ஆய்வகத்தின் ஆளும்குழுவின் தலைவராகப் பணியாற்றி வந்தார், மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் ஆக இருந்தார் எனஇஸ்ரோ தெரிவித்துள்ளது. எம்ஐடியின் (MIT) ஆசிரிய உறுப்பினராகப் பணிபுரிந்தார். டல்லாஸில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகவும் இருந்தார். 2013 இல் வாஷிங்டன்.டி.சி. வில் கவுரவிக்கப்பட்ட "சேட்டிலைட் ஹால்ஆஃப்ஃபேம்" விருதை அவர் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்