முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரத்தின வேல் பாண்டியன் மறைவு
March 1 , 2018 2462 days 788 0
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் காலமானார்.
இவர் 1988 முதல் 1994 வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார்.
ஓய்வு பெற்ற பிறகு 2006 முதல் 2009 வரை தேசிய பிற்படுத்தப்பட்டோர் வாரியத்தின் தலைவராகப் பணியாற்றினார்.
ஆகஸ்ட் 1971ல், இவர் சென்னை உயர்நீதி மன்றத்தின் மாநில அரசு வழக்கறிஞராக (State Public Prosecutor) நியமிக்கப்பட்டார். 1974 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணி உயர்வு பெறும் வரையில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
1988 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருமுறை பணியாற்றியுள்ளார்.
இவர் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முக்கியத் தீர்ப்புகளையும் வழங்கியுள்ளார்.
அவைகளுள் சில:
ஹரியானா மாநில வழக்கு
ஓர்ஸ் – Ch. பஜன்லால் வழக்கு
SR பொம்மை – இந்திய அரசு வழக்கு
உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் பதிவு சங்க வழக்கு (Supreme Court Advocates-on-Record Association)
சட்டம் மற்றும் மனித உரிமை ஆகியவற்றில் இவரின் மெச்சத்தகுந்த பங்களிப்புக்காக, நீதிபதி V.S.கிருஷ்ண அய்யர் விருது 2016 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.
பிற்படுத்தப்பட்டோருக்கு அரசியலமைப்பு ரீதியான இடஒதுக்கீட்டை உறுதி செய்த பிரபலமான இந்திரா சஹானே வழக்கை (1992) விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுவில் இவர் இடம் பெற்றிருந்தார்1994 ல் ஓய்வு பெற்ற பின்னர் ஐந்தாவது மத்திய ஊதியக்குழுவின் தலைவராக செயல்பட்டார்.