TNPSC Thervupettagam

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரத்தின வேல் பாண்டியன் மறைவு

March 1 , 2018 2363 days 743 0
  • முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் காலமானார்.
  • இவர் 1988 முதல் 1994 வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார்.
  • ஓய்வு பெற்ற பிறகு 2006 முதல் 2009 வரை தேசிய பிற்படுத்தப்பட்டோர் வாரியத்தின் தலைவராகப் பணியாற்றினார்.
  • ஆகஸ்ட் 1971ல், இவர் சென்னை உயர்நீதி மன்றத்தின் மாநில அரசு வழக்கறிஞராக (State Public Prosecutor) நியமிக்கப்பட்டார். 1974 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணி உயர்வு பெறும் வரையில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
  • 1988 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருமுறை பணியாற்றியுள்ளார்.

  • இவர் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முக்கியத் தீர்ப்புகளையும் வழங்கியுள்ளார்.
  • அவைகளுள் சில:
  1. ஹரியானா மாநில வழக்கு
  2. ஓர்ஸ் – Ch. பஜன்லால் வழக்கு
  3. SR பொம்மை – இந்திய அரசு வழக்கு
  4. உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் பதிவு சங்க வழக்கு (Supreme Court Advocates-on-Record Association)
  • சட்டம் மற்றும் மனித உரிமை ஆகியவற்றில் இவரின் மெச்சத்தகுந்த பங்களிப்புக்காக, நீதிபதி V.S.கிருஷ்ண அய்யர் விருது 2016 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.
  • பிற்படுத்தப்பட்டோருக்கு அரசியலமைப்பு ரீதியான இடஒதுக்கீட்டை உறுதி செய்த பிரபலமான இந்திரா  சஹானே  வழக்கை (1992) விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுவில் இவர் இடம் பெற்றிருந்தார்1994 ல் ஓய்வு பெற்ற பின்னர் ஐந்தாவது மத்திய ஊதியக்குழுவின் தலைவராக செயல்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்