முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைவு
December 28 , 2024
25 days
93
- முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் (92) காலமானார்.
- 1971 ஆம் ஆண்டில் வர்த்தகத் துறை அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகராக இந்திய அரசாங்கத்தில் அவரது பயணம் தொடங்கியது.
- அவர் 1976-1980 ஆகிய காலகட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் இயக்குநராகப் பணி ஆற்றினார்.
- 1980-82 ஆம் ஆண்டில் திட்ட ஆணையத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றினார்.
- 1982 ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநரானார்.
- அவர் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்தி, நகர்ப்புற வங்கிகள் துறையை நிறுவினார்.
- 1985-87 ஆம் ஆண்டில் திட்ட ஆணையத்தின் தலைவராக இருந்தார்.
- அவருக்கு 1987 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.
- 1991 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராக அவர் ஆனார்.
- 1991 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் எதிர்பாராத விதமாக அவர் நிதியமைச்சராக நியமிக்கப் பட்டார்.
- இவரே இந்தியப் பொருளாதாரத்தினைக் கடுமையான வரவுச் செலவு சமநிலை நெருக்கடியிலிருந்து காப்பாற்றிய சீர்திருத்தங்களின் சிற்பி ஆவார்.
- அவர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இராஜஸ்தானைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து ஓய்வு பெற்றார்.
- இதற்கு முன்பு, அவர் 1991 ஆம் ஆண்டிலிருந்து ஆறு முறைகள் மேலவையில் அசாம் மாநிலத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராக இருந்தார்.
- 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை இரண்டு முறை இந்தியப் பிரதமராகப் பணி ஆற்றினார்.
- 1998-2004 ஆகிய காலகட்டத்தில் மாநிலங்களவையில் அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.
- 2004 ஆம் ஆண்டில், இந்தியாவின் முதல் இந்து சமயம் சாராத பிரதமராக பதவி ஏற்றார்.
- அவரது அரசாங்கம் ஆனது 2005 ஆம் ஆண்டில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தினை (NREGA) அறிமுகப்படுத்தியது.
- அவர் பிரதமராக இருந்த காலத்தில் (2004-2014), இந்தியா வலுவான ஒரு பொருளாதார வளர்ச்சியைக் (ஆண்டிற்கு சராசரியாக 7-8%) கண்டது.
- அவரது கொள்கைகள் இந்தியாவை உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக மாற்ற உதவியது.
- பலர் தொலைபேசி இணைப்பு கிடைக்காமல் காத்திருந்த நேரத்தில், அவரது ஆட்சியில் தான் தொலைத்தொடர்பு துறையில் பல்வேறு புரட்சிகள் ஏற்படுத்தப்பட்டன.
- அவர் 1993 ஆம் ஆண்டு நிதி அமைச்சருக்கான யூரோ பண விருதையும், 1993 மற்றும் 1994 ஆம் ஆண்டுகளுக்கான நிதி அமைச்சருக்கான ஆசியப் பண விருதையும் வென்று உள்ளார்.
Post Views:
93