முன்னாள் மத்திய அமைச்சரவை செயலாளர் TSR சுப்பிரமணியன் மறைவு
February 27 , 2018 2464 days 812 0
முன்னாள் மத்திய அமைச்சரவை செயலர் TSR சுப்பிரமணியன் டெல்லியில் காலமானார்.
இவர் 1961-ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலப் பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியாவார்.
குடிமைப்பணி அதிகாரிகளின் பணிகளில் அரசியல் தலையீட்டைத் தடுக்க உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கைத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த உச்சநீதிமன்றம் குடிமைப்பணி அதிகாரிகளுக்கு தனிவாரியம் அமைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு 2013-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.
மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றியுள்ள இவர், கல்வி மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பாக மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழுக்களின் தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.
இவர் இந்திய ஆட்சி அமைப்பு முறை (Indian Polity), ஆட்சிமுறை (Governance) தொடர்பாக மூன்று புத்தகங்களை எழுதியுள்ளார். அவை,
Journeys Through Babudom and Netaland - Government of India.
Government in India: An Inside View
India at Turning Point: The Road to Good Governance.