பிரபலப் பொருளாதார நிபுணரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யோகிந்தர் K அலக் காலமானார்.
அவர் அகமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் பொருளாதார மற்றும் சமூக ஆராய்ச்சி நிறுவனத்தில் ஓய்வு பெற்ற மாண்புநிலை பேராசிரியராக இருந்தார்.
1996 ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டு, 2000 ஆம் ஆண்டு வரை மேலவையில் ஒரு உறுப்பினராக பணியாற்றினார்.
அவர் 1996-98 ஆம் ஆண்டில் மத்தியத் திட்டமிடல் மற்றும் திட்ட அமலாக்கம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் மின்சக்தி ஆகிய அமைச்சகங்களின் துணைநிலை அமைச்சராகப் பணியாற்றினார்.
மேலும் இவர் 2006 முதல் 2012 ஆம் ஆண்டு வரை ஊரக மேலாண்மைக் கல்வி ஆனந்த் நிறுவனத்தின் (IRMA) தலைவராகவும் பணியாற்றினார்.
இவர் திட்ட ஆணையத்தின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளதோடு, தொழில் துறை அமைச்சகத்தில் தொழில்துறைச் செலவினங்கள் மற்றும் விலைகள் பணியகத்தின் தலைவராகவும் இவர் பணியாற்றினார்.