TNPSC Thervupettagam

முன்னுரிமைகளுக்கான பொதுமைப் படுத்தப்பட்ட அமைப்பு - இந்தியா

February 13 , 2019 2114 days 632 0
  • நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி இந்தியாவை முன்னுரிமைகளுக்கான பொதுமைப்படுத்தப்பட்ட அமைப்பிலிருந்து (The Generalized System of Preferences - GSP) விலக்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றார்.
  • 1970களில் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறையில் இருக்கும் இத்திட்டத்தில் உலகின் மிகப்பெரிய பயனாளி இந்தியாவாகும்.
  • வர்த்தக உறவுகளில் சமீபத்திய சரிவிற்கான முக்கிய தூண்டுதல் மிகவேகமாக வளர்ந்துக் கொண்டிருக்கும் இணையதளச் சந்தை வர்த்தகத்தைக் கட்டுப்படுத்திடும் இந்தியாவின் புதிய மின்னணு வர்த்தக விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதே ஆகும்.
  • இதன் மூலம் இந்தியா ஒரு முக்கிய அமெரிக்க வர்த்தகச் சலுகையை இழக்க நேரிடும். இந்தச் சலுகையின் மூலம் இந்தியா அமெரிக்காவிற்குச் செய்யும் ஏற்றுமதியில் 5.6 மில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு ஜீரோ கட்டணங்களை அனுபவிக்கின்றது.
முன்னுரிமைகளுக்கான பொதுமைப் படுத்தப்பட்ட அமைப்பு
  • வளரும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அடையாளம் காணப்பட்ட 129 பயனாளி நாடுகள் மற்றும் நிலப்பரப்புகளிலிருந்து 4800 பொருட்களுக்கு வரிகள் ஏதுமின்றி முன்னுரிமை நுழைவு அனுமதியை அளித்திடும் ஒரு அமெரிக்க வர்த்தகத் திட்டமே இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்