TNPSC Thervupettagam

முன்னுரிமைக்கான பொதுமைப்படுத்தப்பட்ட அமைப்பு

May 6 , 2018 2395 days 732 0
  • இந்தியா , இந்தோனேசியா மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளின் தகுதியை GSP எனும் திட்டத்தை அவை அமல்படுத்துவது தொடர்பான திட்டங்களின் அடிப்படையில் மதிப்பாய்வு செய்யப் போவதாக அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகள் முறைப்படி அறிவித்துள்ளனர் .
  • வரி அனுகூலத் திட்டத்தின் கீழ் (Tax Benefit Scheme) அமெரிக்க சந்தைகளில் குறிப்பிட்ட பொருட்களின் வரியற்ற அணுகலைப் பெறுவதற்கான இந்தியாவின் தகுதியை மறுமதிப்பீடு செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
  • GSP என்பது 1976 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வர்த்தக முன்னுரிமைத் திட்டமாகும். பொருட்களின் வரியற்ற உள்நுழைவை அனுமதிப்பதன் மூலம் பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிப்பதற்காக வெளிநாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு இம்முன்னுரிமை அமெரிக்க அரசால் வழங்கப்படுகிறது.
  • GSPயின் கீழ், GSPயில் அல்லாத ஏற்றுமதியாளர்களுக்கு விதிக்கப்படும் வரியை ஒப்பிடும் போது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு குறைந்த அளவிலான இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.
  • அமெரிக்க காங்கிரஸ் மன்றமானது மார்ச் 2018-ல், 2020 வரையில் செல்லுப்படியாகத் தக்க வகையில் GSP-யை புதுப்பிக்க வாக்களித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்