TNPSC Thervupettagam

முன்னுரிமைத் துறைக்கு கடன் வழங்கல் விதிகளின் திருத்திய விதிமுறைகள்

September 9 , 2020 1413 days 573 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது வளர்ந்து வரும் தேசிய முன்னுரிமைகளின் வரிசையில், தொழில்முனைவுத் திறன் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் ஆகியவற்றை இணைப்பதற்காக PSL (Priority sector lending) வழிகாட்டுதல்களைத் திருத்தியுள்ளது.
  • இது பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது.
    • மின்சார விநியோக அமைப்பினால் இணைக்கப்பட்ட வேளாண் காற்றழுத்த விசைக் குழாய்களின் சூரிய ஒளிமயமாக்கத்திற்காக வேண்டி சூரிய ஒளி மின்னாற்றல் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்காக விவசாயிகளுக்குக் கடன் வழங்குதல்.
    • அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு ஆலைகளை அமைப்பதற்காகக் கடன் வழங்குதல்.
  • திருத்தப்பட்ட PSL வழிகாட்டுதல்கள் பின்வருவனவற்றை மேற்கொள்ள வழிவகை செய்கின்றது.
    • கடன் வழங்குதலில் பற்றாக்குறையுள்ள பகுதிகளுக்கு சிறந்த முறையில் கடன் வழங்குதல்.
    • சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் விளிம்புநிலை பிரிவினர்களுக்குக் கடன் வழங்குதலை அதிகரித்தல்.
    • புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சுகாதாரக் கட்டமைப்பு ஆகியவற்றிற்கு கடன் வழங்குதலை ஊக்கப்படுத்துதல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்