மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் சென்னையின் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள முப்பரிமாணத்தில் அச்சிடப்பட்ட முதல் வீட்டினைத் திறந்து வைத்தார்.
இந்த வீடானது முப்பரிமாண அச்சிடல் (3D Printed) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டப் பட்டது.
இந்த வீடு வெறும் 5 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.
சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவருடைய கோட்பாட்டின் அடிப்படையில் ‘TVASTA Manufacturing Solutions’ எனும் நிறுவனத்தினால் இந்த வீடு கட்டி முடிக்கப்பட்டது.
முப்பரிமாண அச்சிடல் முறை என்பது டிஜிட்டல் வழிகாட்டுதல்கள் மூலம் முப்பரிமாணப் பொருட்களை உருவாக்கும் ஒரு செயல்முறையாகும்.