TNPSC Thervupettagam

முப்பரிமாணத்தில் அச்சிடப்பட்ட வைரஸ் எதிர்ப்பு பொருள் பூசப்பட்ட முகக் கவசம்

June 16 , 2021 1168 days 526 0
  • தின்கெர் டெக்னாலஜீஸ் இந்தியா (Thincr Technologies) எனும் தனியார் நிறுவனமானது முப்பரிமாணத்தில் அச்சிடப்பட்ட வைரஸ் எதிர்ப்பு பொருள் பூசப்பட்ட முகக் கவசத்தினை வடிவமைத்துள்ளது.
  • தின்கெர் டெக்னாலஜி நிறுவனமானது பூனாவில் அமைந்துள்ள ஒரு புத்தாக்க நிறுவனமாகும்.
  • இந்த முகக்கசங்களில் விருசைட்ஸ் (virucides) எனப்படும் ஒரு வைரல் எதிர்ப்புப் பொருளானது பூசப்பட்டுள்ளது.
  • இந்த விலை மலிவான முகக்கவசங்கள் கோவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • இதன் உருவாக்கத் திட்டத்திற்கு தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தினால் (Technology Development Board) நிதி உதவி வழங்கப்பட்டது.
  • மெர்க் லைஃப் சைன்சஸ் (Merck Life Sciences) எனும் நிறுவனத்தின் உதவியுடன் இந்த முகக் கவசங்கள் உருவாக்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்