TNPSC Thervupettagam

முப்பரிமாண அச்சிடல் முறையில் கட்டமைக்கப்பட்ட தபால் அலுவலகம்

August 30 , 2022 692 days 379 0
  • இந்தியாவிலேயே முதல் முறையாக முப்பரிமாண அச்சிடல் முறையில் கட்டமைக்கப் பட்ட தபால் அலுவலகமானது கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு நகரில் அமைக்கப் பட உள்ளது.
  • ஒரு பாரம்பரிய முறையில் கட்டமைக்கப்படும் கட்டிடத்திற்கு என்று செலவிடப்படும் தொகையில் நான்கில் ஒரு பங்குத் தொகையே இதற்குச் செலவாகும்.
  • பெங்களூரு நகரின் ஹலசூருவில் உள்ள கேம்பிரிட்ஜ் பகுதியில் இந்தப் புதிய தபால் நிலையக் கட்டிடம் அமைக்கப்பட உள்ளது.
  • இந்தத் தபால் அலுவலகக் கட்டிடமானது லார்சன் & டூப்ரோ என்ற நிறுவனத்தினால் கட்டமைக்கப் படுகிறது.
  • இந்தியாவில் தற்போது முப்பரிமாண அச்சிடல் என்ற தொழில்நுட்பத்தை கட்டுமானத்திற்காகப் பயன்படுத்தும் ஒரே நிறுவனம் லார்சன் & டூப்ரோ மட்டுமே ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்