முப்பரிமாண அச்சிடல் தொழில்நுட்ப முறையில் தயாரிக்கப்பட்டத் திரவ ஏவுகல இயந்திரத்தின் செயல்பாட்டு நிலைச் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக மேற் கொண்டது.
PSLV ஏவுகலத்தின் கடை நிலையின் PS4 இயந்திரம் இதற்காகப் பயன்படுத்தப்பட்டது.
PSLV ஏவுகலத்தின் முதல் நிலையின் (PS1) எதிர்வினைக் கட்டுப்பாட்டு அமைப்பிலும் (RCS) இதே இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.
நைட்ரஜன் டெட்ராக்ஸைடினை ஆக்சிஜனேற்றியாகவும், மோனோ மெத்தில் ஹைட்ரேசினை எரிபொருளாகவும் பூமியில் சேமிக்கக் கூடிய இரட்டை உந்துவிப்பு எரிபொருள் கலவைகளை இந்த இயந்திரம் பயன்படுத்துகிறது.