முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட முக வடிவமைப்பு பதிய அமைப்புகள்
December 29 , 2023 332 days 213 0
சென்னையின் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஆனது, கறுப்பு பூஞ்சைத் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக முப்பரிமாண முறையில் அச்சிடப் பட்ட முக வடிவமைப்பு பதிய அமைப்புகளை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையானது, கோவிட்-19 பாதிப்பு கொண்ட நோயாளிகள், கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயாளிகள், HIV/AIDS மற்றும் பிற மருத்துவ பாதிப்புகள் ஆகியவற்றில் பரவலாக உள்ளது.
மியூகோர்மைகோசிஸ் என்றும் அழைக்கப்படுகின்ற கறுப்பு பூஞ்சைத் தொற்று நோய் ஆனது, பாதிக்கப்பட்ட நபர் அவர்களின் முக வடிவமைப்பு அம்சங்களை இழக்க நேரிடும் என்பதால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.
பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு இந்தியாவில் சுமார் 60,000 மியூகோர்மைகோசிஸ் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நபர்களில், இந்தப் பூஞ்சையானது முகத்தின் திசுக்களில் ஊடுருவி, முக கட்டமைப்பு அழுகல் மற்றும் சிதைவை ஏற்படுத்துகிறது.