TNPSC Thervupettagam

முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட இருதயம்

April 17 , 2019 2050 days 641 0
  • இஸ்ரேலில் அறிவியலாளர்கள் மனிதத் திசுக்கள் மற்றும் நாளங்களைப் பயன்படுத்தி முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட ஒரு இருதயத்தை உருவாக்கியுள்ளனர். இது மருத்துவத் துறையின் முதலாவதும் மற்றும் மிகப் பெரியதுமான ஒரு சாதனை எனக் கட்டியம் கூறப்படுகின்றது.
  • மனித இருதயத்தை அச்சிடுவதற்காக அறிவியலாளர்கள் சோதனைக்கான மனித நபர்களின் கொழுப்பு நிறைந்த திசுக்களிலிருந்துப் பெறப்பட்ட “தனிப் பயனாக்கப்பட்ட ஹைட்ரோஜெல்” என்பதனைப் பயன்படுத்தினர். மேலும் பயோஇங்க் என்பதனையும் உருவாக்கினர்.
  • செல்கள், இரத்த நாளங்கள், இதயக் கீழறைகள் மற்றும் அறைகள் உள்ளடங்கிய ஒரு முழுமையான இருதயம் வெற்றிகரமாக வடிவமைக்கப்பட்டு அச்சிடப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும். இது எந்த ஒரு தனி நபராலும் இதுவரை நிகழ்த்தப் படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்