இஸ்ரேலில் அறிவியலாளர்கள் மனிதத் திசுக்கள் மற்றும் நாளங்களைப் பயன்படுத்தி முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட ஒரு இருதயத்தை உருவாக்கியுள்ளனர். இது மருத்துவத் துறையின் முதலாவதும் மற்றும் மிகப் பெரியதுமான ஒரு சாதனை எனக் கட்டியம் கூறப்படுகின்றது.
மனித இருதயத்தை அச்சிடுவதற்காக அறிவியலாளர்கள் சோதனைக்கான மனித நபர்களின் கொழுப்பு நிறைந்த திசுக்களிலிருந்துப் பெறப்பட்ட “தனிப் பயனாக்கப்பட்ட ஹைட்ரோஜெல்” என்பதனைப் பயன்படுத்தினர். மேலும் பயோஇங்க் என்பதனையும் உருவாக்கினர்.
செல்கள், இரத்த நாளங்கள், இதயக் கீழறைகள் மற்றும் அறைகள் உள்ளடங்கிய ஒரு முழுமையான இருதயம் வெற்றிகரமாக வடிவமைக்கப்பட்டு அச்சிடப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும். இது எந்த ஒரு தனி நபராலும் இதுவரை நிகழ்த்தப் படவில்லை.