TNPSC Thervupettagam

மும்பை பருவநிலை செயல் திட்டம்

March 18 , 2022 857 days 418 0
  • பிருஹன் மும்பை மாநகராட்சிக் கழகம் தயாரித்த மும்பை பருவநிலை செயல் திட்டம் என்பது வெளியிடப்பட்டது.
  • பருவநிலை மாற்றத்தின் சவால்களைச் சமாளிப்பதற்காக மும்பை நகரத்திற்கான 30 ஆண்டு கால ஒரு செயல்திட்டத்தினை மும்பை பருவநிலை செயல் திட்டம் வகுத்து உள்ளது.
  • 2050 ஆம் ஆண்டிற்குள் நிகரப் பூஜ்ஜிய உமிழ்வு என்ற ஒரு இலக்கை அடைய குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட காலப் பருவநிலை இலக்குகளை இத்திட்டம் நிர்ணயித்துள்ளது.
  • அடுத்த 30 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டிய ஆறு மூலோபாயப் பகுதிகளை இத்திட்டம் அடையாளம் கண்டுள்ளது.
  • இதன் மூலம் 2050 ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வை அகற்றச் செய்வதற்கான திட்டங்களை உருவாக்கும் முதல் தெற்காசிய நகரமாக மும்பை திகழ்கிறது.
  • மும்பை பருவநிலை செயல் திட்டத்தின் முக்கிய நோக்கமானது, மும்பையின் எரிசக்தி கட்டமைப்பினைக்  கார்பன் நீக்கம் செய்வதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்