TNPSC Thervupettagam

மும்பை – நாக்பூர் நெடுஞ்சாலை

April 12 , 2020 1562 days 548 0
  • தேசிய வனவிலங்கு வாரியமானது (NBWL - National Wildlife Board) மும்பை-நாக்பூர் நெடுஞ்சாலைக்கான இறுதி அனுமதியை வழங்கியுள்ளது.
  • இந்த நெடுஞ்சாலையானது கதேபூர்ணா மற்றும் கரன்ஜா சோஹல் கலைமான் வனவிலங்குச் சரணாலயங்களின் 10 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு  மண்டலத்தின் வழியாகச் செல்கின்றது. 

NBWL பற்றி

  • NBWL என்பது வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம், 1972ன் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
  • இது பிரதம அமைச்சரால் தலைமை தாங்கப்படுகின்றது.
  • NBWL-ன் அனுமதி இல்லாமல் தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்குச் சரணாலயங்களின் எல்லைகளை மாற்றியமைக்க முடியாது. 
  • இது பிரதம மந்திரி உள்பட 47 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
  • இது 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (2 மக்களவை உறுப்பினர்கள் மற்றும் 1 மாநிலங்களவை உறுப்பினர்), அரசு சாரா அமைப்புகளைச் சேர்ந்த 5 உறுப்பினர்கள், சூழலியல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் சுற்றுச்சுழல் அமைப்புகளைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் ஆகியோரையும் கொண்டுள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்