TNPSC Thervupettagam

மும்பை – 16 வது செலவுமிகு நகரம்

March 13 , 2018 2452 days 745 0
  • அண்மையில் வெளியிடப்பட்ட நைட் பிராங்க் வள அறிக்கை 2018-ன் படி (Knight Frank Wealth Report 2018), உலகின் 20 முன்னணி  செலவுமிகு நகரங்கள் (costliest cities)  பட்டியலில் மும்பை 16வது செலவுமிகு நகரமாக பட்டியலிப்பட்டுள்ளது.
  • 2016 ஆம் ஆண்டு இப்பட்டியலில் மும்பை 15-வது இடத்தில் இருந்தது.
  • உலகின் முன்னணி செலவுமிகு நகரங்களுள் மேற்கு ஐரோப்பாவிலுள்ள இறையாண்மையுடைய தேச நகரமான (sovereign city-state)  மொனாக்கோ  (Monaco)  முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து ஹாங்காங்  நகரம் இரண்டாம் இடத்தில் உள்ளது.
  • அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் இங்கிலாந்தின் லண்டன் ஆகியவை முறையே 3 வது மற்றும் 4வது இடத்தில் உள்ளன.
  • நகரத்தினுடைய செல்வ வளம், முதலீடு, வாழ்க்கை முறை, நகரின் எதிர்காலம் ஆகிய நான்கு முக்கிய அளவுருக்களின் அடிப்படையில் இந்தக் குறியீடு கணக்கிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் பிற முக்கிய நகரங்களான டெல்லி, சென்னை மற்றும் பெங்களூரு ஆகியவை இப்பட்டியலில் முதல் 100 இடங்களில் இடம் பிடித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்